Search This Blog

Thursday, February 23, 2012

ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம்?

ஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம்? என்ற தலைப்பில் குமுதம் சிநேகிதி படைத்த கட்டுரையில் என்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளேன்.






Saturday, February 18, 2012

கல்கியின் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது'


கல்கி சதாசிவம் அறக்கட்டளை நினைவாக ஆண்டுதோறும் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது' அளிக்கப்படுகிறது. கல்கி பத்திரிகையை துவங்கவும், நடத்தவும் பக்கபலமாக இருந்த திரு,சதாசிவம் மற்றும் திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக கல்கி சதாசிவம் அறக்கட்டளையை கல்கி குழுமம் நடத்திவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலமாக சொற்பொழிவு, விருது மற்றும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 18ந்தேதி (பிப். மாலை 6 மணி) நடைபெற்ற விழாவில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் திரு.வகுள் இந்திய பொருளாதாரம் குறித்து 1.15 மணி நேரம் ஆழமான ஆங்கில உரை ஆற்றினார். விசுவல் கம்யூனிகேஷன் கற்கும் 7 ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.


சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருதை தேர்ந்தெடுக்கும் பணியை நான், திரு.கல்கி ராஜேந்திரன் மற்றும் திருமதி.பத்மினி பட்டாபிராமன் (அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை) இணைந்து தேர்வு செய்தோம். ஆண்டு தோறும் வெளியான தமிழ் அச்சு ஊடகங்களின் அனைத்து விளம்பரங்களையும் தொகுத்து தேர்வு செய்தோம். தேர்வுப்பணி அடையாறிலுள்ள கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் சென்ற மாதம் நடைபெற்றது.

சிறந்த தமிழ் விளம்பர விருது திருப்பூரை சேர்ந்த 'ராம்ராஜ் காட்டன்ஸ்' நிறுவனத்திற்கு ( வேட்டி+ உள்ளாடைகள்) அளித்தோம். விளம்பரத்தை தயாரித்த 'க்ரையான்ஸ்' விளம்பர நிறுவனத்திற்கு பிரதான விருது அளிக்கப்பட்டது.


Friday, February 17, 2012

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்


நாற்றமிழாம் நற்றமிழ் மன்ற விழா

கணித்தமிழும் பயன்பாடும் கருத்தரங்கம்



சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரியில் 16ந் தேதி மாலை 3 மணிக்கு 'கணித்தமிழும் பயன்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் கணித்தமிழ்ச் சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் சட்டமனற உறுப்பினர் முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். கணித்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.மா.ஆண்டோ பீட்டர் 'கணினியும் தமிழும்' என்ற தலைப்பிலும், கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.டி.என்.சி.வெங்கடரங்கன் 'கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் 'இணையத்தமிழ் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பேசினர்.