Search This Blog

Wednesday, December 14, 2011

பாரதியார் பற்றிய இணையத் தளம்

பாரதி புகழ் ஓங்குக!!
பாரதியாரின் இணையத்தளம் மகாகவி பாரதியாரின் 130 ஆவது பிறந்த நாளான 11.12.2011 அன்று முதல் பாரதியாரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் வழங்க www.mahakavibharathiyar.info என்னும் இணையதளம் தஞ்சாவூர் பாரதி சங்கத்தால் தொடங்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பாரதியார் நான் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்ததை எண்ணி பெருமையடைகிறேன்.

Tuesday, December 6, 2011

மைக்ரோசாப்ட்டின் இந்திய மொழிகளுக்கான இணையம்

மைக்ரோசாப்ட்டின் இந்திய மொழிகளின் தொழில்நுட்ப வசதிக்காக www.bhashaindia.com என்ற இணைய தளத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. தகவல்கொழில்நுட்பச் செய்திகள், மைக்ரோசாப்ட் செய்திகள், சமூக இணையச் செய்திகள், மைக்ரோசாட்டின் கருவிகள், பதிவிறக்கங்கள் மற்றும் மொழி சார்ந்த செய்திகளும் இந்த இணையத்தில் தொகுக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ் ஆபிஸில் தமிழ் உள்ளீடு செய்யும் மென்பொருட்கள் (Driver software) மற்றும் முழுமையாக விண்டோஸை தமிழில் வேலை செய்ய வைக்கக்கூடிய கருவிகளும் (IME's) இந்த இணையத்தில் அளிக்கப்படுகின்றன. இவையனைத்தையும் நாம் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட்டின் இந்த இந்திய மொழிகளின் தொழில்நுட்பவசதிக்கான இணையம் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்குனி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளுக்காக இயக்கப்படுகிறது. செய்திச் சேவைக்காக இவ்விணையம் விருதுகளையும் பெற்றுள்ளது. http://bhashaindia.com/Pages/AboutBhashaIndia.aspx

அடோப் பிரீமியர் - புத்தக விமர்சனம்

அடோப் பிரீமியர் - புத்தக விமர்சனம் (வீடியோ எடிட்டிங் தொழில்நுட்ப கையேடு) திரைப்படத்தொகுப்பு மென்பொருட்களில் முக்கியமானது அடோப் பிரீமியர் ஆகும். பிரீமியர் மென்பொருளை அடிப்படையாக தெரிந்தாலே எடிட்டிங் துறையில் நாம் வெற்றி பெற முடியும். இந்த மென்பொருளின் இயக்கம் பற்றியும் ஒவ்வொரு தேர்வு கருவிகளை பற்றியும் விளக்கமாக இந்நூல் தமிழில் படைக்கப்பட்டுள்ளது. வீடியோகிராபி, ஆடியோ, போஸ்ட் புரொடெக்சன், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் அனிமேஷன், முக்கிய பிளேக் இன்ஸ், இணையதளங்கள் மற்றும் அடோப் பிரீமியர் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைப்பாடுகள் பற்றியும், கட்டளைகள் பற்றியும் தெளிவாகவும் விரிவாகவும் உள்ளது. அடோப் பிரீமியர் என்ற வீடியோ மென்பொருள் கலை நூலை மா.ஆண்டோ பீட்டர் நுணுக்கமாக எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே கிராபிக்ஸ் அனிமேஷன் மற்றும் வரைகலைகளுக்கு பல நூல்களை எழுதியுள்ளார். வீடியோ கிளிப்பின் அளவை மாற்றுதல், ஒளி ஊடுருவும் தன்மை ஆடியோ மிக்ஸர் என அடோப் பிரீமியரில் உள்ள சிறப்புகளை இந்நூல் கூறுகிறது. தமிழகமெங்கும் பரவியுள்ள கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல் வல்லுனர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். வீடியோ மென்பொருள் துறையில் எந்தவொரு மென்பொருளின் இயக்கம் பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலத்தில் கைடு வழங்கப்படும். ஆனால் தமிழில் இதுவரை மென்பொருள் கைடு இல்லை எனும் குறையை போக்குகிறது இந்த புத்தகம். >ஆசிரியர் பெயர் : “கணியரசு” மா.ஆண்டோபீட்டர்
பதிப்பக முகவரி : சாப்ட்வியூ பதிப்பகம். 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை–29
தொலைபேசி : 23741053,wwww.softview.in
விலை: ரூ.110/-
பக்கங்கள்: 160