ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வரை நேரில் கண்டது பெருமைக்குரிய விசயமாகும். தமிழக முதல்வர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழப்பிரச்னையை வலியுறுத்தியுள்ளது அதைவிட மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்.
”இலங்கையில் போர் முடிந்து இரண்டு வருடம் ஆகியும் மக்கள் வசதியற்ற முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசை அமெரிக்க அரசு வற்புறுத்த வேண்டும்” என்று ஹிலாரி கிளிண்டனிடம் கேட்டுக்கொண்டுள்ளார் தமிழக முதல்வர்.
”இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ அமெரிக்க அரசு பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். நியூஜெர்சி மகாண சட்டசபையும் இவர்களுடைய சந்திப்புக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
”முகாமில் உள்ள தமிழர்களை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும், இலங்கை கடலோர காவல் படையினர் ராமேஸ்வர மீனவர்களை சுட்டு தள்ளும் கொடுமையினை நிறுத்த வேண்டும்” என்றும் இலங்கை தூதர் பிரசாத்கரியவாசத்திடம் வலியுறுத்தி உள்ளார் முதல்வர்.
இலங்கையில் ”தமிழீழம்” அமைந்தால் தமிழ் மக்கள் உங்களுக்கு என்றும் நன்றி உணர்வுடன் இருப்பார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை என்றென்றும் மறக்க மாட்டார்கள் தமிழீழ மக்கள்...அவர்கள் மனதில் என்றென்றும் ராணியாக, மகாராணியாக இருக்கலாம்.
No comments:
Post a Comment