கணையாழி கலை, இலக்கிய இதழின் துவக்க விழா சித்திரை முதல் நாள் சென்னை தி.நகரிலுள்ள வாணி மகாலில் நடைபெற்றது. (14.4.2011) தமிழக தேர்தலின் கூச்சல், பரபரப்பு முடிந்த கையோடு ஆரோக்கியமான தமிழ் விழா என "மீண்டும் கணையாழி" விழாவை குறிப்பிடலாம். விழா அரங்கு முழுமையும் தமிழ் நெஞ்சங்களாக காட்சியளித்தனர். கஸ்தூரிரங்கன் நிறுவிய கணையாழியின் புதிய ஆசிரியர்க்குழுவில் மா.ராசேந்திரன், கவிஞர் சிற்பி, மு.ராமசாமி, ட்ராட்ஸ்கி மருது, கி.நாச்சிமுத்து, பிரசன்னா ராமசாமி, சுபாஷினிட்ரெம்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விழாவில் ஜெயகாந்தன், நாசர், இந்திரா பார்த்தசாரதி, ஈரோடு தமிழன்பன், முத்துக்குமார், ட்ராட்ஸ்கி மருது, ஞாநி, நரசைய்யா, ஜெயதேவன், குட்டிரேவதி மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். கணையாழி விழாவை மா.ராசேந்திரனின் மகள் தென்றல் தொகுத்து வழங்கினார். கணையாழி முதல் இதழை வாங்கவும், சந்தா கட்டணம் கட்டவும் கூட்டம் அலை மோதியது.
கணையாழி ஒரு பத்திரிகையல்ல, அது ஒரு இயக்கம். இந்த இலக்கிய இயக்கத்தில் பங்கேற்க அனைவருக்கும் ஒர் நல்வாய்ப்பு.
பதவி, அதிகாரம், அரசியல் தொடர்புகள் ராசேந்திரனுக்கு இருந்தாலும், அதை சுவைக்காமல் தமிழை சுவைக்கிறார். பாம்பு அதன் சட்டையை உரித்து உதறுவதுபோல் அனைத்தையும் உதறிவிட்டு ராசேந்திரன் கணையாழியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். மனிதன் தனக்கு விருப்பமானதை தானே செய்ய முடியும். கணையாழி இப்பரந்த தமிழ் உலகில் வெற்றி பெற வாழ்த்துகள்.
பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteமு.இளங்கோவன்
புதுச்சேரி
அன்பு நண்பருக்கு
ReplyDeleteவணக்கம் மிக்க மகிழ்ச்சி
சந்தா செலுத்த வாங்கி எண் மற்றும் மேல் விவரம் அறிய தர இயலுமா
மிக்க நன்றி i
ராதாகிருஷ்ணன்
சந்தா செலுத்தும் விவரம் அறிய:
ReplyDeletekanaiyazhi2011@gmail.com
maran.tamil@gmail.com